தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது…
ரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக் கொண்டே இருக்கிறார்கள். புனிதமான இந்தப் பாத்திரங்களின் தெய்வீகப் பண்புகளும், சாந்த ரூபமான தியாக நிலைகளும் மங்களகரமான அமைதி நிறைந்த முடிவுகளும் மனித குலம் முழுவதையும் ஆசிர்வதிப்பது போலவும் அருள் பாலிப்பது போலவும் இருக்கின்றன.
லீயர் நாடகத்தை கேட்டுக் கொண்டிருந்தபோது “அடடா, இப்படியெல்லாம் வாய்நிறைய எடுத்துச்
சொல்ல தமிழ் எத்தனை கோடி யுகங்களாய் தவம் இயற்றியதோ” என்று அதிசயித்துக் கொண்டே இருந்தேன்.
இத்தனை நூற்றாண்டுக் காலமாக மொட்டாக இருந்த தமிழ் அன்னை, மணத்தோடும் சுகத்தோடும் பூத்து விரிகிறாள். அப்படிப் பூத்து விரியச் செய்வது தங்களுடைய ஒய்யாரமான மந்திரச் சொற்களும், அந்தச் சொற்களை நெறிப்படுத்தி வைக்கிற மோகன நடையுமே ஆகும்.
– தமிழ் வித்வான் ல. ஷண்முகசுந்தரம்
Author: William Shakespeare (Translated By Justice Dr.S.Maharajan)
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days