எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்து விடுகிறாள். மரகதப் பச்சைக்கல் ரூஹில் ஒளிர்கின்றது. லஷ்மியின் மொழியில் ஆன்மீக விசாரத்திற்குரிய பூடகத்தன்மையின்றி உயிர்ப்பாய் வெளிப்படுகிறது.
-லஃபிஸ் ஷகித்
Author: Lakshmi SarvanaKumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days