ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே நம் ஞாபகத்தில் எஞ்சியிருக்கின்றன. அதிலும் இளைய தலைமுறைக்கு பெயர் கூடத் தெரியவில்லை.
உவேசா, கு. அழகிரிசாமி, தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன், திருவிக என்று தொடங்கி தமிழ் படைப்புலகின் போக்கைத் தீர்மானித்த சில முக்கிய எழுத்தாளர்களையும் அவர்களுடைய படைப்புகளையும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் சாரு நிவேதிதா.
தினமணி இணையப் பதிப்பில் வெளிவந்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்தக் கட்டுரைகள் முதல்முறையாக இப்போது நூல் வடிவம் பெறுகின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days