“இமயமலைப் பயணத்தினூடே அராத்துவின் நள்ளிரவின் நடனங்கள் படிக்க நேர்ந்த போது மிரண்டு விட்டேன். Charles Bukowski-யின் கதைகளுக்கு நிகரான கதைகள் இவை. சமகாலத்திய தமிழ் இலக்கியத்தின் நிலையை எண்ணினால் சோர்வே மிஞ்சுகிறது. யாருக்கும் வாசகரைத் துன்புறுத்தாமல் கதை சொல்லத் தெரியவில்லை. சமகாலத் தமிழ் இலக்கியம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறது. நான் வாசகர்களைச் சொல்லவில்லை.எழுத்தாளர்களைச் சொல்கிறேன். இந்த நிலையில் அராத்து எழுதிய இந்தச் சிறுகதைகள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை என்று எனக்குத் தோன்றுகிறது. இந்திய இளைய சமுதாயத்தினர் இன்று அனுபவிக்கும் angst இந்தச் சிறுகதைகளில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அராத்துவுக்கு angst என்றால் என்ன என்று தெரியாது. தெரிய வேண்டியதில்லை.”
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil