கழுதைப்பாதை (KAZHUDHAI PATHAI) - S. Senthilkumar
ZDP107
Regular price Rs. 375.00 INR Sale price Rs. 330.00 INR Save 12%கழுதைகள் மேடேற மேடேற முதுகிலிருந்த சுமை நழுவிப் புட்டத்துப் பக்கமாகச் சரிந்தது. கீழே தவறிவிழாமல் ‘நெஞ்சுக்கவுறுகட்டு’ பிடித்து நிறுத்தியது. கழுத்தோடு சேர்ந்து கட்டிய நெஞ்சுக்கவுறுகட்டு உயிர்போகிறதுபோல, அழுத்திப்பிடித்தது. கழுதைகள் வலியோடு மலையேறின. புட்டத்துப் புண்ணின் மேல் விழுந்த கயிறுகட்டு அழுத்திப் புண்ணை அறுத்தது. புண்ணிற்குப் பக்கத்திலும் புண்ணின் மேலும் கயிறு அறுத்த தடம் விழுந்தது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கழுதையின் புட்டத்தில் கயிறுகட்டு அழுத்தி அழுத்தி வேதனையை உண்டாக்கியது. வலியை பொறுத்துக் கொண்ட கழுதைகள், மேடேறும் தோரணை அலாதியானது. கம்பீரமானது. அதே சமயம் சோகமானது; வேதனையானது. மூவண்ணா சொல்லியது உண்மைதான். ‘மனுஷ வாழ்க்கையும் கழுதை வாழ்க்கையும் ஒன்றுதான். மனுஷனைப்போலத் தான் கழுதையும்’.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
