ஒளியின் பெருஞ்சலனம் (OLIYIN PERUCHALANAM) - Charu Nivedita
ZDP69
Regular price Rs. 220.00 INR Sale price Rs. 200.00 INR Save 9%/
1974 நவம்பர் இறுதியில், பாரிஸிலிருந்து வெர்னர் ஹெர்ஸாகுக்கு ஒரு ஃபோன் வருகிறது. “லோட்டே ஐஸ்னர் சாகக் கிடக்கிறார். இன்னும் சில மணி நேரமோ அல்லது ஒரு நாளோதான் கெடு. உடனே விமானத்தைப் பிடித்து வா” என்கிறது நண்பரின் குரல். “என்னது, ஐஸ்னர் சாகக் கிடக்கிறாரா? ஐஸ்னர் செத்து விட்டால் அப்புறம் ஜெர்மன் சினிமா என்ன ஆவது? முடியாது. அவரை சாக விட மாட்டேன். இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு, பனியைத் தாங்கும் கடினமான புதிய ஷூவை அணிந்து கொண்டு ம்யூனிச் நகரிலிருந்து நடந்தே பாரிஸுக்குக் கிளம்புகிறார். நவம்பர் 23-ஆம் தேதி கிளம்பியவர் டிசம்பர் 14 அன்று பாரிஸ் வந்து சேர்ந்தார் ஹெர்ஸாக்.
புத்தகத்திலிருந்து…
Author: Charu Nivedita
Genre: Film, Drama and Music
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
