உலக மர்மங்களில் மிகமுக்கியமானதொன்றாகக் கணிக்கப்படும், ‘பயிர் வட்டச் சித்திரங்கள்’ (Crop circle) மனிதர்களால், உருவாக்கப்படுகின்றனவா இல்லை மனிதர்களல்லாத வேறு ஏதோ, அமனித சக்தியினால் உருவாக்கப்படுகின்றனவா என்பதை, ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’ என்னும் இந்த நூல் ஆராய்கிறது. அதன் தொடர்ச்சியாக இவற்றை உருவாக்குவது வேற்றுகோள் வசிகளாக இருக்குமோ என்னும் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு, வேற்றுகோள் வாசிகளின் இருப்பு உண்மையானதா என்பதையும் ஆராய்கிறது.
எந்தவொரு முன்முடிவும் இல்லாமல், தர்க்கரீதியான ஆதாரங்களைப் படிக்கும் வாசகர்களிடம் கொடுத்து, அவர்களையே இறுதி முடிவுக்கான இடத்திற்கும் கொண்டு செல்கிறது. படிக்கப் படிக்க ‘இப்படியும் இருக்குமா?’ என்ற வாசகர்களின் ஆவலை இந்நூல் மேலும் தூண்டிக்கொண்டேயிருக்கும்.
Author: Raj Siva
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days