136 products
ஸீரோ டிகிரி (ZERO DEGREE) - Charu Nivedita
ZDP62
Regular price Rs. 400.00 INR Sale price Rs. 350.00 INR Save 13%ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வு பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்நிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல்.இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்.Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல்.இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே lipogrammatic நாவல்.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
மஞ்சள் நிறப் பைத்தியங்கள் (MANJAL NIRA PAITHIYANGAL) - S. Senthil Kumar
ZDP168
Regular price Rs. 190.00 INRகாலமும் வெளியும் தன்னை அந்தரங்கமாக விசிறியைப் போல ஒன்றையொன்று மறைத்துக் கொண்டுள்ளது. நடந்து முடிந்த காலத்தின் இருப்பிடம் ஓர் ஸ்தூலமாகவே அமைந்திருப்பதற்குப் பதிலாக வரைபடம் போல கதைகளில் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு வகையில் அதன் சிறப்பம்சமே.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 working days
விலகிச் செல்லும் பருவம் (VILAGI SELLUM PARUVAM) - S. Senthil Kumar
ZDP167
Regular price Rs. 190.00 INRசெந்தில்குமாரின் கதைவெளி நுட்பமானது. வாழ்வின் எல்லா ரகசியங்களையும் தமக்குள் ஒளித்துவைத்துக்கொண்டிருப்பவை அவரது பாத்திரங்கள். அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல். வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின்தொடர்ந்து செல்லும் செந்தில்குமார் ஒருபோதும் அவற்றின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. வாழ்வின் சுமை தாளாத தருணங்களில் அவை விடும் பெருமூச்சுகளை, ரகசியமான புணர்ச்சியின்போது அவை கசியவிடும் வியர்வைத் துளிகளை, கொடிய வன்முறைக்குள்ளாகிப் பெற்றுள்ள காயங்களிலிருந்து பெருகும் குருதியை, வதைபடும் ஆன்மாவிலிருந்து சொட்டும் கண்ணீர்த் துளிகளைச் சேகரித்துப் பத்திரப்படுத்தி எடுத்து வந்துவிடுகிறார் செந்தில்குமார். தன் அறிதலை மிகத் தணிந்த குரலில் வாசகனிடம் பகிர்ந்துகொள்ளும் முனைப்பே அவரது படைப்புச் செயல்பாடு. எளிய வெதுவெதுப்பான சொற்களால் வாசிப்பனுபவத்தைத் திணறலாக மாற்றும் வித்தை அவருக்குக் கைகூடியிருப்பதன் ரகசியம் இதுவே.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 working days
மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (MAZHAIKU PIN PURAPPADUM RAIL VANDI) - S. Senthilkumar
ZDP166
Regular price Rs. 200.00 INRசகமனிதனின் மேலான வன்முறை, அன்றாட தேவைக்காக தன் மேலும் தனது பாரம்பரியத்தின் மேலும் நிராகரிப்பை சுமந்து நிற்கிற தனிமனிதன் மற்றும் குடும்பங்களின் கதைகள்தான் இவை.
நாவலின் அடிப்படையான குணாம்சங்களின் துணையோடு தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் இக்கதைகள் சம்பிரதாய பாணியிலான கதை வடிவத்தை மீற முயல்கின்றன. நாவலுக்குரிய தோற்றத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இக்கதைகளின் கதாபாத்திரங்கள் தாங்கள் வசிக்கும் நிலத்தையும் காலத்தையும் கூடவே அதன் தன்மைகளையும் பிரதிபலிக்கின்றன.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 working days
மஹாபாரதம் (MUZHU MAHABHARATHAM -14 VOLUMES) - Arulselvaperarasan
ZDP165
Regular price Rs. 12,999.00 INRசெ.அருட்செல்வப்பேரரசன் பல வருடங்களாக உழைத்து மொழிபெயர்த்த கிஸாரி மோஹன் கங்குலியின் “தி மஹாபாரதா ” வை பதினான்கு பாகங்களாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
கெட்டி அட்டையாக பதிப்பிக்கப்படும் 14 பாகங்களின் மொத்த விலை Rs 12999/
Author: Arulselvaperarasan
Genre: Others (Epic)
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
ஊரின் மிக அழகான பெண் (OORIN MIGA AZHAGANA PEN) - Charu Nivedita
ZDP164
Regular price Rs. 350.00 INRஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உலகின் பிரபலமான சிறுகதைத் தொகுதிகளில் பார்க்க முடியாத அரிதினும் அரிதான கதைகள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கூட பனாமாவைச் சேர்ந்த ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்காது. ஏனென்றால், லத்தீன் அமெரிக்கச் சூழலிலேயே அதிகம் விவாதிக்கப்படாதவர் அவர். தமிழ்ச் சூழலில் தி.ஜ.ரங்கநாதன், ப.சிங்காரம், நகுலன் போல் வைத்துக் கொள்ளுங்களேன். ரொஹேலியோ சினான் பற்றி இணையத்தில் தேடினால்கூட மூணு வரி தான் போட்டிருக்கும். இவர்களைப் பற்றியெல்லாம் நான் கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த Granma என்ற வாரப் பத்திரிகையிலிருந்து தெரிந்து கொண்டேன். டேப்ளாய்ட் அளவில் வரும் அந்தப் பத்திரிகை. இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத தென்னமெரிக்கக் கதைகளை முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார்கள் அப்பத்திரிகையில். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை பிரபலமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பிலேயே கூட பார்க்க இயலாது.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 working days
வாசிப்பது எப்படி? (VAASIPATHU EPADI) - Selventhiran
ZDP163
Regular price Rs. 100.00 INRவாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
Author: Selventhiran
Genre: Others (Language and Teaching)
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
அத்தாரோ (ATHARO) - Saravanan Chandran
ZDP162
Regular price Rs. 230.00 INRஅத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற,
அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித்
துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள்
குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய்
உணரும் கணத்தில் என்னவாக மாறுகிறான்? இந்த
ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று ஓயாத கேள்விகளை எழுப்புகிறது
அத்தாரோ நாவல். ஒட்டுமொத்தமும் மிதக்கிற பந்தில்,
பரவியிருக்கிற அதனதன் எல்லைகளை மறுவிசாரணை செய்து,
பிரபஞ்ச ரகசியமொன்றைக் கண்டறிய முயல்கிறார் சரவணன் சந்திரன்
Author: Saravanan Chandran
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
பாலை நிலப் பயணம் (PALAI NILA PAYANAM) - Selventhiran
ZDP161
Regular price Rs. 120.00 INRநான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று – ஜெயமோகன்
Author: Selventhiran
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 working days
மீமொழி (MEEMOZHI) - Kutti Revathi
ZDP160
Regular price Rs. 135.00 INRஎன் கதைமாந்தர்கள் யதார்த்த உலகில் திரிபவர்கள் அல்ல. என்றாலும் அவர்களின் மீயதார்த்த வாதத்திற்கான நுண்மங்கள் எல்லாம் இயல்பு மனவெளியில் வித்தாகியவையே. இயல்புவாதத்திலிருந்து தன்னை அறுத்தறுத்துக் கொண்டு விடுபடும் தீவிர உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். புத்தெழுச்சியும் நுண்மொழியும் இக்கதைமாந்தர்களின் அகப்புலன்களாகி, வாழ்வின் போதாமையை புலன் கடந்து வெல்லப் பார்க்கின்றனர். ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின் இது என் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 working days
மாக்பெத் (MACBETH) - William Shakespeare - Translated By Justice Dr. S .Maharajan
ZDP159
Regular price Rs. 350.00 INRஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும், ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும், இதற்கு முன்பே ‘ஹாம்லெட்’ ‘லியர் அரசன்’ என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும், தமிழை இயல்பாக, லாவகமாக, உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள். இவற்றை ஆட்சியோடு கையாளுவதால், ‘மாக்பெத்’ என்ற இந்த நாடக மொழிபெயர்ப்பின் மூலமாக, ஷேக்ஸ்பியரின் இதயத்தை அவரால் தொட முடிகிறது.
ஷேக்ஸ்பியரை நேரிற்பயிலும் போது ஏற்படும் ஐயங்கள், இடர்பாடுகள், இவை ஏதுமின்றி தெளிந்த இன்றைய தமிழில் மகராஜன் தருகிறார். அவருடைய உதவியால் பழங்காலத்து ஸ்காட்லாண்டுக்குப் போகிறோம்; அங்கே உயிர்பெற்றுக் கண்முன்னே உலாவும் பாத்திரங்களோடு ஒட்டுகிறோம்; மனித உள்ளத்தின் விதவிதமான கதிகளை நாமே பயில்கிறோம்; அதன் பெருமையை, அதன் சிறுமையைக் காண்கிறோம். பிறகு பக்குவம் பெற்ற மனதோடு தினசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறோம். இத்தனைக்கும் துணை செய்யும் உலக மகாகவி ஒருவனோடு, கரவின்றி உறவாடும் கவிதைப் பயனைப் பெறுகிறோம். இதைச் சாத்தியமாக்கிய அறிஞர் மகராஜன் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்.
-பேராசிரியர் அ. சீநிவாசராகவன்
Author: William Shakespeare
Translated By: Justice Dr. S . Maharajan
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
அராஜகம் ஆயிரம் (ARAAJAGAM AYIRAM) - Araathu
ZDP158
Regular price Rs. 200.00 INRட்வீட்ஸ்
Author: Araathu
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 working days
ஆட்கொல்லி (AATKOLLI) - Ka. Na. Subramaniam
ZDP157
Regular price Rs. 120.00 INRக. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் க. நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க. நா. சு. வின் நாவல்கள்.
Author: Ka. Na. Subramaniam
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 working days
ஒரு நாள் (ORU NAAL) - Ka. Na. Subramaniam
ZDP156
Regular price Rs. 200.00 INRக. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் க. நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க. நா. சு. வின் நாவல்கள்.
Author: Ka. Na. Subramaniam
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 working days
அசுரகணம் (ASURAGANAN) - Ka. Na. Subramaniam
ZDP155
Regular price Rs. 120.00 INRக. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் க. நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க. நா. சு. வின் நாவல்கள்.
Author: Ka. Na. Subramaniam
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 working days
வாழ்ந்தவர் கெட்டால் (VAAZHDHAVAR KETTAL) - Ka. Na. Subramaniam
ZDP154
Regular price Rs. 100.00 INRக. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் க. நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க. நா. சு. வின் நாவல்கள்.
Author: Ka. Na. Subramaniam
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
காஃபிர்களின் கதை (KAAFIRGALIN KADHAI) - Keeranur Zakir Raja
ZDP153
Regular price Rs. 230.00 INRபிரிட்டிஷ்காரன் தொடங்கி வைத்த ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ இன்னும் வெவ்வேறு வழியாகத் தொடர்ந்து தொடர்ந்து’நல்லிணக்கம்’ குலைக்கும் வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறது. ஆனால் இவ்வஞ்சகத்தைப் புரிந்துகொண்ட இந்துவும் இஸ்லாமியனும் தங்களின் ஆத்மார்த்தமான பிணைப்பினால் அதை முறியடித்து வருகிறார்கள்.
இஸ்லாம் சமூகம் குறித்து சகோதர சமயம் சார்ந்த எழுத்தாளர்கள் என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளனர் என ஆராய முற்பட்டேன். அவ்வாறான கதைகளை சேகரித்தேன். பாரதி முதல் பல நவீன எழுத்தாளர்களும் இப்பட்டியலுக்குள் வந்து சேர்ந்தார்கள். வழக்கம் போல வணிக எழுத்தாளர்களைக் கணக்கில் கொள்ளவில்லை.
இது முதல் முயற்சி. வேறு எந்த எழுத்தாளரும் மேற்க்கொள்ளாத முயற்சி.இதன் காரணமாகவே இத்தொகுப்பு முக்கியத்துவம் பெருகிறது.
Author: Keeranur Zakir Raja
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
சிறுகதை- சிறுகதை குறித்த கட்டுரைகள் (SIRUKATHAI - SIRUKATHIA KURITHA KATTURAIGAL) - S. Sethil Kumar
ZDP152
Regular price Rs. 330.00 INRஏன் சிறுகதை எழுத வேண்டும்? ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்? சிறுகதையின் அரசியல் என்ன? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் தமிழ் இலக்கியம் கற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக அல்லது நவீன இளம் தலைமுறை சிறுகதைப் படைப்பாளர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு இந்நூல் புதிய அர்த்தங்களைத் தருகிறது. புதிய வாசிப்பின் தேவையை நேர்மையுடன் பரிசீலனை செய்கிறது.
தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளின் சிறுகதை குறித்த கட்டுரை அடங்கிய நூல் இது. இக்கட்டுரைகளை வாசித்து, பிறகு, சிறுகதைகளை வாசிப்பவர்கள் ‘சிறுகதையை ஏன் வாசிக்க வேண்டும்?’ என மறுபரிசீலனை செய்யத் தொடங்கும் போது கிடைக்கும் வெளிச்சங்கள் அர்த்தப்பூர்வமானதாக மாறும்.
Author: S Senthil Kumar
Genre : Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
தற்கொலைக் கவிதைகள் (THARKKOLAI KAVITHAIGAL) - Araathu
ZDP151
Regular price Rs. 120.00 INRபல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி
சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன்
ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்கும்
புல்டோசர். கரப்பான் பூச்சிகள், காகங்கள், பூரான்கள், வண்ணத்துப் பூச்சிகள்,
வெட்டுக்கிளிகள் போன்ற உயிரிகள் மட்டும் இவரிடம் சற்று இரக்கம் பெறுகின்றன!
வரம் தரும் கடவுளில் இருந்து பாரில் மட்டையாகும் இளம்பெண் வரை எல்லாருக்கும்
ஒரே ட்ரீட்மெண்ட்!
-அசோகன் நாகமுத்து
Author: Araathu
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
காலத்தை விஞ்சி நிற்கும் கலை (KAALATHAI VINJI NIRKUM KALAI)- Keeranur Zakir Raja
ZDP150
Regular price Rs. 340.00 INRகடந்த இருபதாண்டுகளாக புனைவெழுத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கீரனூர் ஜகிர்ராஜாவின் நாற்பதாண்டு கால வாசிப்பனுவத்தின் வெளிபாடுகளே இக்கட்டுரைகள்.
புதுமைப்பித்தனிலிருந்து சத்யஜித்ரேவுக்கும், ஜெயகாந்தனிலிருந்து உதிரிப்பூக்கள் மகேந்திரனுக்கும், பாரதியிலிருந்துரதியிலிருந்து யசுனாரி கவபட்டா, பெர்லேகர் க்விஸ்டுக்கும், வாசகனால் வெகு சுலபமாகப் பிரவேசிக்க ஏதுவான விதத்தில் இவை எழுதப்பட்டுள்ளன.
Author: Keeranur Zakir Raja
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
ஜின்னாவின் டைரி (JINNAVIN DIARY) - Keeranur Zakir Raja
ZDP148
Regular price Rs. 210.00 INRகீரனுர் ஜாகிர் ராஜா “ஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகசிப்புகள் அழுத்தமான கசையடிகளாகி கடுமையான வேதனைகளை ஏற்படுத்துபவை. அதன் மூலம் புதிய எழுத்தை நோக்கி பயணிக்க வைப்பவை.
Author: Keeranur Zakir Raja
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
உயிரளபெடை (UYIRALABEDAI) - Kayal
ZDP147
Regular price Rs. 130.00 INRகவிதைத் தொகுப்பு
Author: Kayal
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
பானர் வகையறா (BANAR VAGAIYARA) - Mounana Yaathiriga
ZDP149
Regular price Rs. 130.00 INRசங்க காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகக் கட்டமைக்கப்பட்ட கூட்டு நனவிலி தமிழ் மனம் மௌனன் யாத்ரிகாவின் கவிதைகளில் அழகியலாக மலர்கிறது. இவருடைய கவிதைகளில் பாணரும் விரலியரும் கூத்தருமாகச் சுற்றி நின்று குரவைக் கூத்து ஆடுகிறார்கள். தொல்காப்பியர் பேசும் திணைக் கோட்பாடு சார்ந்த தமிழ் வாழ்க்கையின் தொல் வகைமை இன்றைய கிராம வாழ்க்கையில் எப்படியெல்லாம் தொழிற்படுகிறது என்பதை மௌனன் யாத்ரிகாவின் நவினக் கவிதைகள் பேசுகின்றன.
மொத்தத்தில் இக்கவிதைகளின் உள்ளே தற்காலத் தமிழ் அழகியலின் ஜல்லிக்கட்டு நடப்பதத் தீவிர வாசகனால் உணர முடியும்.
Author: Mounana Yaathiriga
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
மீன்குகைவாசிகள் (MEENGUGAI VAASIGAL) - Keeranur Zakir Raja
ZDP146
Regular price Rs. 220.00 INRகீரனூர் ஜாகிர்ராஜா வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர்நிலைக்குச் சென்று இறக்கிவிடுகிறதோ அங்கே இறங்கிக்கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை உண்டு.
Author: Keeranur Zakir Raja
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
குட்டிச்சுவர் கலைஞன் (KUTTISUVAR KALAIGNANA) - Keeranur Zakir Raja
ZDP145
Regular price Rs. 160.00 INRஎழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல் தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா
Author: Keeranur Zakir Raja
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
பாலும் மீன்களுமே வாங்கிக் கொண்டிருந்தவள் (PAALUM MEENGALUM VAANGI KONDIRUNDHAVAL) - Iyyappa Madhavan
ZDP144
Regular price Rs. 100.00 INRஅய்யப்பமாதவன் கதைகள் கிராமக் கூட்டுக்குடும்ப வாழ்வினின்றும் பயணமாகி பெரு நகரத்தில் தனிக்குடும்பமாய் ஸ்டோர் வீடுகள் எனும் எதிரெதிர் வாசல் கதவுகளினுள்ளே வாழும் பல தரப்பட்ட மனிதர்களீனூடாக உழல்பவை.
அங்கிருந்து வெளியேறி தத்தம் இருத்தலை நகர நெரிசலுக்குள் புழங்கி மீண்டு தங்களின் வாடகைக் குடியிருப்புகளுக்கான தனித்துவத்தையும் பேணிக்கொள்பவை.
-யவனிகா ஸ்ரீராம்
Author: Iyyappa Madhavan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
பேய்த்தினை (PEITHINAI) - Mounana Yaathiriga
ZDP143
Regular price Rs. 99.00 INRதம் வாழ்வையும் நிலங்களையும் பொருளற்ற சுகத்திற்காக அடமானம் வைத்த அப்பாவி மற்றும் அடப்பாவி மனிதர்களை நினைக்கும்போதெல்லாம் எழுதத்தூண்டும் பேருணர்ச்சிகள் இப்போது வருகின்றன. பேய்த்திணை வந்தபோது அப்படியெல்லாம் ஒன்று தோன்றியதில்லை. அது தன்னைச் சுற்றிய வட்டத்துக்குள் ஒளிர்ந்த வாழ்வையும் கணங்களையும் கொண்டிருந்தது.
Author: Mounana Yaathiriga
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (AADIVASIGAL NILATHIL BONSAI) - Kayal
ZDP142
Regular price Rs. 130.00 INRபிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.
நேசமித்திரன்
Author: Kayal
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
Stay updated on latest collections, discounts and more