15 products
தற்கொலைக் கவிதைகள் (THARKKOLAI KAVITHAIGAL) - Araathu
ZDP151
Regular price Rs. 120.00 INRபல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி
சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன்
ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்கும்
புல்டோசர். கரப்பான் பூச்சிகள், காகங்கள், பூரான்கள், வண்ணத்துப் பூச்சிகள்,
வெட்டுக்கிளிகள் போன்ற உயிரிகள் மட்டும் இவரிடம் சற்று இரக்கம் பெறுகின்றன!
வரம் தரும் கடவுளில் இருந்து பாரில் மட்டையாகும் இளம்பெண் வரை எல்லாருக்கும்
ஒரே ட்ரீட்மெண்ட்!
-அசோகன் நாகமுத்து
Author: Araathu
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
பானர் வகையறா (BANAR VAGAIYARA) - Mounana Yaathiriga
ZDP149
Regular price Rs. 130.00 INRசங்க காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகக் கட்டமைக்கப்பட்ட கூட்டு நனவிலி தமிழ் மனம் மௌனன் யாத்ரிகாவின் கவிதைகளில் அழகியலாக மலர்கிறது. இவருடைய கவிதைகளில் பாணரும் விரலியரும் கூத்தருமாகச் சுற்றி நின்று குரவைக் கூத்து ஆடுகிறார்கள். தொல்காப்பியர் பேசும் திணைக் கோட்பாடு சார்ந்த தமிழ் வாழ்க்கையின் தொல் வகைமை இன்றைய கிராம வாழ்க்கையில் எப்படியெல்லாம் தொழிற்படுகிறது என்பதை மௌனன் யாத்ரிகாவின் நவினக் கவிதைகள் பேசுகின்றன.
மொத்தத்தில் இக்கவிதைகளின் உள்ளே தற்காலத் தமிழ் அழகியலின் ஜல்லிக்கட்டு நடப்பதத் தீவிர வாசகனால் உணர முடியும்.
Author: Mounana Yaathiriga
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
பேய்த்தினை (PEITHINAI) - Mounana Yaathiriga
ZDP143
Regular price Rs. 99.00 INRதம் வாழ்வையும் நிலங்களையும் பொருளற்ற சுகத்திற்காக அடமானம் வைத்த அப்பாவி மற்றும் அடப்பாவி மனிதர்களை நினைக்கும்போதெல்லாம் எழுதத்தூண்டும் பேருணர்ச்சிகள் இப்போது வருகின்றன. பேய்த்திணை வந்தபோது அப்படியெல்லாம் ஒன்று தோன்றியதில்லை. அது தன்னைச் சுற்றிய வட்டத்துக்குள் ஒளிர்ந்த வாழ்வையும் கணங்களையும் கொண்டிருந்தது.
Author: Mounana Yaathiriga
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (AADIVASIGAL NILATHIL BONSAI) - Kayal
ZDP142
Regular price Rs. 130.00 INRபிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.
நேசமித்திரன்
Author: Kayal
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
பிங்க் நிறக் கடல் (PINK NIRA KADAL) - Dhanasakthi
ZDP109
Regular price Rs. 80.00 INRஎன்னைக் கடலாகவும் வனமாகவும் பறவையாகவும் ஆகாயமாகவும் உணர முடிவது கவிதை எழுதும்போது மட்டுமே.
Author: Dhanasakthi
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
குட்டி ரேவதி கவிதைகள் -தொகுதி 2 (KUTTI REVATHI KAVITHAIGAL - VOLUME 2)
ZDP100
Regular price Rs. 450.00 INR Sale price Rs. 380.00 INR Save 16%குட்டி ரேவதி கவிதைகள், சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன; கோபம் கொள்கின்றன; வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும் போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றால் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது
சொல்லிணைகளும், மின் தெறிப்பாய்த் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவு கூருமாறு செய்கின்றன. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனமும் விடுதலை வேட்கையும் படிமங்களால் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் ஆகிய தளங்களில் ஒலிக்கும் ஏக்கம், நிராசை, காமம், மரணம், ஆற்றல், பரவசம், எழுச்சி, போராட்டம் போன்ற அனுபூதிகளால் குட்டி ரேவதி கவிதைகள் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு, பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கின்றன. பெண்ணிட மிருந்து விலக்கப்பட்ட சொற்களைத் துணிந்து உச்சரிக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளமாய்ப் பிரவகித்துப் பாய்கின்றன. பின், வெள்ளம் வடிந்ததும் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கும் எழுச்சியும் கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியிலிருந்து இக்கவிதைகள் பீறிடுகின்றன.
Author: Kutti Revathi Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
குட்டி ரேவதி கவிதைகள் - தொகுதி 1 (KUTTI REVATHI KAVITHAIGAL - VOLUME 1)
ZDP99
Regular price Rs. 599.00 INR Sale price Rs. 500.00 INR Save 17%செயலின்பம், விடுதலை ஊக்கம், அழகு என்னும் பேறுநிலை – இவை குட்டி ரேவதி கவிதைகளின் நித்திய அகவிசைகள். இந்தியச் சூழலில் வர்ணமயப்படுத்தப்பட்ட சாதியுடலை, சமூக, பால்நிலை – அதிகார மரபுகள் வழி வரையறுக்கப்பட்ட மொழியுடலை இக்கவிதைகள் மற்றமைகள் நோக்கி, பேரண்டம் நோக்கி – விடுதலை செய்கின்றன. ஒரு தனிப்பட்ட சுயத்தின் குரலாக அல்லாமல், தன்னிலிருந்து ஆதிப் பெண் வரையான புதைப்படிவங்கள் தேடி, பெண் எனும் மொத்தப் பிரபஞ்சத்தின் கூட்டு உடல்களையும் அதன் அறிதல்களையும் அகழ்ந்து வருகின்றன. காதல், புணர்ச்சி
எல்லாம் வரலாற்று கதியிலிருந்து விடுவிக்கப்பட்டு இயற்கையின் ஞானத்திலும் இசைமையிலும் வைக்கப்பட்டுள்ளன. சூரியன், கடல், வானம் எனப் பிரபஞ்சத்தின் பூரணத்துவம் வாய்ந்த நித்திய படிமங்களோடு இக்கவிதைகள் வேட்கையுடன் உரையாடுகின்றன. சூழலியல், ஈழம், மானுட உரிமைகள் எனக் காலத்தின் சமூக உடலாகி வலியும் மீட்சியும் கொண்டு துடிக்கின்றன. குட்டி ரேவதி கவிதைகளின் மொத்தத் தொகுப்பான இந்த நூல், காலத்தின் மீதான அதிர்வு என்பதாக மட்டுமல்லாது தன்னளவில் நிறைவான மாற்று மெய்ம்மையை, ஒரு மெய்த்தளத்தை உருவாக்கியுள்ளது.
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
பின்னங்களின் பேரசைவு (PINNANGALIN PERASAIVU) - Nesamithran
ZDP76
Regular price Rs. 150.00 INRஉலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில், உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளை பேசிப் பார்க்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்பாக ‘பின்னங்களின் பேரசைவு’ தொகுக்கப்பட்டிருக்கிறது.
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
துடிக்கூத்து (THUDIKUTHU) - Nesamithran
ZDP75
Regular price Rs. 120.00 INRநம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்பு செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன.
-எஸ். சண்முகம்
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
நன்னயம் (NANNAYAM) - Nesamithran
ZDP74
Regular price Rs. 130.00 INRசமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்ரன்.
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
அயல் மகரந்தச் சேர்க்கை (AYAL MAGRANTHA SERKAI) - Nesamithran
ZDP73
Regular price Rs. 300.00 INRஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்ற்ம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன.
-எஸ். சண்முகம்
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
புத்தர் வைத்திருந்த தானியம் (BUDHTHAR VAITHIRUNTHA THAANIYAM)- Maunan Yatrika
ZDP68
Regular price Rs. 150.00 INRஇந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையின் விவரிப்பிலும் உரிப்பொருளை முன்வைக்க முதல் பொருளான நிலத்தையும் பொழுதையும் காட்டிவிட்டுக் கருப்பொருள்களை விளைவிக்கிறார் கவிஞர் மெளனன் யாத்ரிகா.
Author: Maunan Yatrika
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
அம்புயாதனத்துக் காளி (AMBUYADHANATHU KALI) - Prabhu Gangadharan
ZDP67
Regular price Rs. 120.00 INRபிரபு கங்காதரனின் ‘காளி’ தொகுப்பு தமிழில் இதுவரை பேசியிராத தாந்த்ரீகப் பாலியல் பற்றிப் பேசுகிறது. இந்தத் தொகுப்பு தமிழ்க் கவிதை உலகில் பல நூற்றாண்டுகள் பேசப்படும்.
Author: Prabhu Gangadharan
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
உடலாடும் நதி (UDALADUM NADHI) - Latha Arunachalam
ZDP66
Regular price Rs. 150.00 INRகவிதைத் தொகுப்பு
ஒரு காதல் செய்து விடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம் .
Author: Latha Arunachalam
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
வல்லபி (VALLABI) - Thenmozhi Das
ZDP60
Regular price Rs. 200.00 INR Sale price Rs. 180.00 INR Save 10%தேன்மொழி தாஸின் கவிதை தொகுப்பான வல்லபியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் .
Author: Thenmozhi Das
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days
Stay updated on latest collections, discounts and more